காந்தி:
நான் அகிம்சை என்ற ஒரே வழியை மட்டுமே அறிவேன். இம்சை என்பது என் வழிக்கு எதிரானது. இம்சை வழி சென்றிட என்னை நான் பழக்கப்படுத்தமாட்டேன். நான் கடவுளை விசுவசிக்கிறேன். கடவுள் ஆதரவற்றவர்களை ஆதரிப்பவர். எப்போது ஒருவர் கடவுளின் இரக்கத்திற்கு காத்துக்கிடக்கின்றாரோ அப்போதுதான் கடவுள் அவருக்கு உதவ முடியும் . இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கடவுள் ஒரு நாள் என்னை அகிம்சை வழி மக்களை வழிநடத்த சக்தி தருவார் என விசுவசிக்கிறேன்.
நான் என்னுடைய வாழ்க்கையில் சூதாட்டக்காரன் போன்றே இருந்தேன். ஆனால் அகிம்சை வழியாக சத்தியத்தை கண்டுகொள்ளவேண்டும் என்ற ஆவல் என்னுள் வளர்ந்துகொண்டே இருந்தது. எப்படி விஞ்ஞானிகள் தங்கள் தவறு செய்வதும், பின்பு புதிய கண்டுபிடிப்பை உலக்குத் தருகிறார்களோ, அதேபோல அகிம்சை வழி நான் தொடரும்போது தவறுக்கும் உள்ளாகி கற்றுக்கொண்டிருக்கிறேன்,
நான் அகிம்சை பாடத்தை என் மனைவியிடம் கற்றுக்கொண்டேன். அது எப்படியெனில் அவளை என்னுடைய விருப்பத்திற்கு ஆட்டிப்படைத்தேன். ஆனால் அவளோ எந்த எதிர்வினையயும் காட்டாது அமைதியாக எனக்கு பணிந்தாள். என் அடக்குமுறைக்கு அவள் காட்டிய அடக்கம், பணிவுதான் நான் ஒரு முட்டாள் என்பதை உணரவைக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக நான் என் அடக்குமுறை மதியீனத்தைக் குறித்து வெட்கி தலைகுனிந்தேன். இறுதியில் அடிமையாக்க நினைத்த அவளே எனக்கு அகிம்சையை போதிக்கும் ஆசிரியையாக ஏற்றுக்கொண்டேன். அகிம்சை என்பது ஒன்றும் செய்யாது அமைதி காக்கும் கையாலாகாதத் தனம் அல்ல. அகிம்சை வழி என்பது உன்னதமான செயலாற்றல் ஆகும்.
என்னை என் நண்பர்கள் புகழவேண்டும் என்பதற்காக ஏதோ வீரசாகசம் செய்துவிட்டேன் என்று சொல்வதற்காக இதைச் செய்யவில்லை. இன்று வரை ஒரு கணமும் நில்லாது அகிம்சை வழி தொடர்ந்துகொண்டிருக்கிறேன் என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும்.
Monday, June 8, 2009
Sunday, June 7, 2009
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
“விட்டுவிடு என்றதை விடாதுபோய் விழுவாய்;
தொட்டதை மீள மீளவும் தொடுவாய்;
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்
பழமையாம் பொருளில் பரிந்துபோய் வீழ்வாய்.
பழமையேயன்றி பார்மிசை ஏதும்
புதுமை காணோம் எனப் பொருமுவாய்
இன்பம் என்றெண்ணி துன்பத்து வீழ்வாய்.
- மகாகவி பாரதியார்
Wednesday, May 13, 2009
விருப்ப மலர்
தோட்டத்து மலர்களின் வண்ணங்களைக் குறித்த
ஆச்சரியங்களில் மூழ்கிப்போயிருந்தன
நட்புக்காலங்கள்.
விருப்ப மலர்களையும் நிறங்களையும்
குறித்துக்கொண்டு வந்தமருமுன்
அவைகளைப் பரப்பி வரவேற்றிருப்போம்
ஒருவரையொருவர்.
காலவதியாகி உயிர்விடும் உணர்வுகள்
மேலிடும்போது விருப்ப மலர்களைக் குறித்த
தேடலில் சுவராசியம் தெரியவில்லை.
மலர்களைக் கொய்து விரயம் செய்யாதிருந்து
சருகுகள் குவித்து ஈரம்
உலர்த்திக்கொண்டிருக்கிறது
இக்காலம்.
ஆச்சரியங்களில் மூழ்கிப்போயிருந்தன
நட்புக்காலங்கள்.
விருப்ப மலர்களையும் நிறங்களையும்
குறித்துக்கொண்டு வந்தமருமுன்
அவைகளைப் பரப்பி வரவேற்றிருப்போம்
ஒருவரையொருவர்.
காலவதியாகி உயிர்விடும் உணர்வுகள்
மேலிடும்போது விருப்ப மலர்களைக் குறித்த
தேடலில் சுவராசியம் தெரியவில்லை.
மலர்களைக் கொய்து விரயம் செய்யாதிருந்து
சருகுகள் குவித்து ஈரம்
உலர்த்திக்கொண்டிருக்கிறது
இக்காலம்.
Monday, May 11, 2009
விலைபோகாத விலையில்...
சொற்ப தொகைக்கு நான்குஜோடி சாக்ஸ்
வாங்கிச் செல்லக் கேட்டார் சுருட்டு புகைத்து
பழுப்பு வேட்டியும் கலைந்த முண்டாசும்
அணிந்திருந்த நடைபாதை கிழவர்.
அவர் காட்டிய கருப்பு, கட்டிநீலம், ப்ரவுன், வெள்ளை
அனைத்தும் விரும்பப்படுபவைதான்.
போக்குக்காட்டியபோது இன்னும் ஒரு ஜோடி
தருவேன் வாங்கு தம்பி என அன்பொழுகினார்.
அந்த விலையில் தரம் இருக்குமா
என்ற நினைப்போடு அடுத்த கடைக்கு சென்று
கண்ணாடிப் பெட்டிக்குள் அதே தரத்தில்
ஒரு ஜோடி விலை பன்மடங்காயிருந்ததை
வாங்க மனங்கொள்ளாது வீடு வந்து
குளிர் இரவில் வெற்றுக்காலுடன்
சட்டென்று உறங்கிப்போனேன்...
கனவில் நுழைந்த பெரியவர்
ஜில்லிட்ட என் கால்களுக்கு
சாக்ஸ் அணிந்துவிட
துவங்கியிருந்தார்
வாங்கிச் செல்லக் கேட்டார் சுருட்டு புகைத்து
பழுப்பு வேட்டியும் கலைந்த முண்டாசும்
அணிந்திருந்த நடைபாதை கிழவர்.
அவர் காட்டிய கருப்பு, கட்டிநீலம், ப்ரவுன், வெள்ளை
அனைத்தும் விரும்பப்படுபவைதான்.
போக்குக்காட்டியபோது இன்னும் ஒரு ஜோடி
தருவேன் வாங்கு தம்பி என அன்பொழுகினார்.
அந்த விலையில் தரம் இருக்குமா
என்ற நினைப்போடு அடுத்த கடைக்கு சென்று
கண்ணாடிப் பெட்டிக்குள் அதே தரத்தில்
ஒரு ஜோடி விலை பன்மடங்காயிருந்ததை
வாங்க மனங்கொள்ளாது வீடு வந்து
குளிர் இரவில் வெற்றுக்காலுடன்
சட்டென்று உறங்கிப்போனேன்...
கனவில் நுழைந்த பெரியவர்
ஜில்லிட்ட என் கால்களுக்கு
சாக்ஸ் அணிந்துவிட
துவங்கியிருந்தார்
Saturday, May 9, 2009
முதல் மலர்
அருகிபோயிருந்த வேர் அகற்றி
மண் உலர்த்தி அடுத்த பாண்டத்தில்
புதுமண் சேர்த்து நட்டிருந்தேன்.
தினசரி குவளைத் தண்ணீர்
அவ்வப்போதான தூவானம் சேர்ந்து
சிலநாட்களில் வீரியம்கொண்டு
நிமிர்ந்து எழுந்தது அந்தச் செடி.
அறை ஜன்னல் நோக்கி
மொட்டு குவித்து நின்ற
பருவநாளிலிருந்து கன்னிப் பூவில்
முதன்முதலாய் கண் விழித்திட
காலைதோறும் காத்திருந்தேன்.
இதழ் பிரிந்து அகம் திறக்கும் இன்று
காணவருகையில்
முகம் திருப்பி உதயத்தில்
லியித்துக்கொண்டிருந்தாள்
சூர்யகாந்தி.
மண் உலர்த்தி அடுத்த பாண்டத்தில்
புதுமண் சேர்த்து நட்டிருந்தேன்.
தினசரி குவளைத் தண்ணீர்
அவ்வப்போதான தூவானம் சேர்ந்து
சிலநாட்களில் வீரியம்கொண்டு
நிமிர்ந்து எழுந்தது அந்தச் செடி.
அறை ஜன்னல் நோக்கி
மொட்டு குவித்து நின்ற
பருவநாளிலிருந்து கன்னிப் பூவில்
முதன்முதலாய் கண் விழித்திட
காலைதோறும் காத்திருந்தேன்.
இதழ் பிரிந்து அகம் திறக்கும் இன்று
காணவருகையில்
முகம் திருப்பி உதயத்தில்
லியித்துக்கொண்டிருந்தாள்
சூர்யகாந்தி.
Subscribe to:
Posts (Atom)

